FOURTH ESTATE

r%f mf;fiwAld; ePq;fSk; xU nra;jpahsuhf>ePq;fs; ve;j %iyapy; ,Ue;jhYk; cq;fs; vz;zq;fis ,q;Nf gjpT nra;ayhk;..! tuNtw;fpNwhk;.. nra;jpfs; njhlh;ghd tPbNahf;fs; A+l;A+g; jsj;jpy; cs;sd.!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.!


















ஈரோடு சன் டி.வி செய்தியாளர் மீது தாக்குதல்.!

கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய வன்முறைத் தாக்குதலில்,ஈரோடு பகுதியின் சன் டி.வி.செய்தியாளர் குணசேகரன் கடந்த 3.8.10.அன்று இரவு,கடுமையாகத் தாக்கப்பட்டார்.படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தைக் கண்டித்து,தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முhவட்டத்தலைவர் பா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,மாநில அமைப்புச் செயலாளர் பிரபாகரன்,மாநில இணைச்செயலாளரும்,தேசியக்குழு உறுப்பினருமான கொழுமம் தாமோதரன்,மாவட்டத் துணைத்தலைவர் ஏ.அக்பர்,சன் டிவியின் மாவட்ட செய்தியாளர் அவினாசிலிங்கம் உட்பட பலர் கண்டண உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பொற்காலம்இதழின் செய்தியாளர் ராஜா,செய்தியாளர்களின் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சட்டரீதியான அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அவரின் இக்கருத்து செய்தியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொள்ளாச்சி சன் டிவி செய்தியாளர் அக்பர் பேசும்போது, செய்தியாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் எந்த அமைப்பானாலும், அவர்கள் தொடர்பான செய்திகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

தேசியக்குழு உறுப்பினர் தாமோதரன் பேசும்போது,வன்முறை எந்த அமைப்பின் சார்பில் வந்தாலும் அதனைத் தட்டிக்கேட்கவும்,செய்தியாளர்களின் உரிமையில் தலையிடும் யாராயிருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,அரசு வழிகாட்டி,சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கேப்டன் டி.வி செய்தியாளர் மருதாச்சலம், மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் மார்ட்டின்,இண்டியா ரேடியோவைச் சேர்ந்த வெங்கடபதி,தாமரைச் சந்திரன் உட்பட முன்னனி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் 50.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு,செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி தமிழகஅரசை வலியுறுத்தியும்,கொ.மு.க.விற்கு கண்டணம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

vedios in 'youtube'-tag- pollachi fourth estate-5.8.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக